News Galaxy

  • Home
  • Business
    • Internet
    • Market
    • Stock
  • Parent Category
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • Featured
  • Health
    • Childcare
    • Doctors
  • Home
  • Business
    • Internet
    • Market
    • Stock
  • Downloads
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • Parent Category
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • Featured
  • Health
    • Childcare
    • Doctors
  • Uncategorized

Monday, 19 February 2018

செல்லூர் ராஜுவின் 'செல்போன்' மாயம்

 February 19, 2018     news, sellur raja, tamil     No comments   

செல்லூர் ராஜுவின் 'செல்போன்' மாயம்



திருவண்ணாமலையில் உள்ள ஜவ்வாது மலைக்குச் சென்றபோது அமைச்சர் செல்லூர் ராஜுவின் செல்போன் மாயமானதாக ஒரு தமிழ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய கூட்டுறவு வங்கியின் 30 வது கிளை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஜவ்வாது மலையில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் உணவருந்த சென்றபோது, அமைச்சரின் செல்போன் மாயமானதாக கூறப்படுகிறது.

மாயமான சாம்சங் செல்போனை எங்கு தேடியும் கிடைக்காததால் செல்லூர் ராஜு ஏமாற்றத்தில் திரும்பி சென்றார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்.

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

நண்பரின் உயிரணுக்களை தினமும் குடிக்கும் விசித்திர பெண்..! ஏன் தெரியுமா..?

 February 19, 2018     england, firend, sperm     No comments   

நண்பரின் உயிரணுக்களை தினமும் குடிக்கும் விசித்திர பெண்..! ஏன் தெரியுமா..?


இங்கிலாந்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது நண்பரின் உயிரணுக்களை தினமும் காலை ஒரு டீஸ்பூன் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இரண்டு குழந்தைகளுக்கு தாயான இளம்பெண், தனியாக வசித்து வருகிறார்.

இவர் காலையில் ஒரு டீஸ்பூன் அளவு உயிரணுக்களை சாப்பிடுகிறாராம்.

இதனால் என்றென்றும் இளமையுடன், ஆரோக்கியமாக வாழ்வதாக கூறும் அவர், புத்துணர்ச்சியுடன் இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

நண்பருக்கு எந்தவித கெட்ட பழக்கங்களும் இல்லாததுடன், பாலியல் நோய்களும் இல்லை என்பதால் தைரியமாக உட்கொள்கிறாராம்.

அத்துடன் முகத்திற்கு பேஸ் மாக் போல தடவிக்கொண்டு 15 நிமிடங்கள் கழித்து கழுவுவதால் முகம் பளபளப்பாகும் எனவும், மற்றவர்கள் தன்னை பற்றி என்ன நினைத்தாலும் கவலையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


அவர் சாப்பிடும் உணவை பொறுத்து உயிரணுக்களின் சுவை வித்தியாசப்படும் என்பதுடன், ஆல்கஹால் அருந்தியிருந்தால் மட்டும் பாதாம் அல்லது பழச்சாறுகளை கலந்து கொண்டு அருந்துவதாகவும் தெரிவிக்கிறார்.

உயிரணுக்களில் பெட்டாசியம், இரும்புச்சத்து உள்ளதால் உடல்நலத்திற்கும் நல்லது எனவும் கூறுகின்றார்
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

Sunday, 18 February 2018

2018-19ம் ஆண்டில் ‘விராட் கோலி படை’க்கு காத்திருக்கும் சோதனைகள், சவால்கள்...

 February 18, 2018     india, new world cup indian team, world tour     No comments   

2018-19ம் ஆண்டில் ‘விராட் கோலி படை’க்கு காத்திருக்கும் சோதனைகள், சவால்கள்...



உலகக்கோப்பைப் போட்டிக்கு முன்பாக, 2018-19ம் ஆண்டில் இந்திய அணி பங்கேற்று விளையாடும், சர்வதேச ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டி விவரங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்( பிசிசிஐ) வெளியிட்டுள்ளது.
உலகக்கோப்பைப் போட்டிக்கு முன்பாக, இந்திய அணி 30 ஒருநாள் போட்டிகள், 12 டெஸ்ட் போட்டிகள், 21டி20 போட்டிகள் என மொத்தம் 63 போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது.
இந்த ஆண்டுக்கான இந்திய அணியின் போட்டித் தொடர் இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடருடன் முடிகிறது. அதன்பின், 2018-19ம் ஆண்டுக்கான கிரிக்கெட் போட்டித் தொடர் தொடங்குகின்றன.


ஏப்ரல் மாதத்தில் இருந்து ஐபிஎல் போட்டிகள் தொடங்கி மே மாதம் வரை நடக்கிறது. அந்த போட்டிகளில் இந்திய அணியின் பெரும்பாலோனோர் விளையாடுவதால், சர்வதேச போட்டிகளில் ஏதும் பங்கேற்கமாட்டார்கள்.
அதன்பின் ஜூன் மாதத்தில் இருந்து இந்திய அணி தனது பயணத்தை தொடங்குகிறது. முதலில் அயர்லாந்து செல்லும் இந்திய அணி அந்த நாட்டு அணியுடன் 2 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அதே மாதத்தில் பெங்களூரு நகரில் ஆப்கானிஸ்தான் அணியுடன் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் இந்திய அணி பங்கேற்கிறது.


அடுத்தார் போல் இங்கிலாந்துக்கு ஏறக்குறைய 80 நாட்கள் பயணம் மேற்கொள்கிறது கோலி தலைமையிலான இந்திய அணி. ஜூலை மாதம் இறுதிவரை இங்கு இருக்கும் இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது.

ஆகஸ்ட் மாதம் நடைபெறும் ஆசியக் கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில் அடுத்ததாக இந்திய அணி பங்கேற்கிறது. உலகக்கோப்பைப் போட்டிக்கான தேதி அறிவிக்கப்பட்டபின் ஆசியக்கோப்பை போட்டிக்கான தேதி அறிவிக்கப்பட இருப்பதால் இன்னும் தேதிகள் இறுதிசெய்யப்படவில்லை. ஆசியக் கோப்பைப் போட்டியில் ஏறக்குறைய 9ஒருநாள் போட்டிகள் வரை நடக்கிறது.


அதை முடித்துக் கொண்டு தாயகம் திரும்புகிறது இந்தியஅணி. அக்டோபர் நவம்பர் மாதத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறது. அந்த அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது.
இந்த தொடரை முடித்துக்கொண்டு இந்திய அணி ஆஸ்திரேலியா புறப்படுகிறது. அங்கு செல்லும் கோலி படை, ஆஸ்திரேலியா அணியுடன் 4 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடர் நவம்பர் முதல் டிசம்பர் வரை நடக்கிறது.

இறுதியாக ஜிம்பாப்பே நாட்டுடன் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டித்தொடருடன் இந்திய அணியின் 2018-19ம் ஆண்டு பயணம் முடிகிறது.
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ஒரு வருடமாக 'நக்குல்' பந்துவீச முயற்சி - புவனேஷ்வர் குமார்

 February 18, 2018     bhuvneshwar, india, new world cup indian team     No comments   

ஒரு வருடமாக 'நக்குல்' பந்துவீச முயற்சி - புவனேஷ்வர் குமார்


ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற புவனேஷ்வர் குமார், நக்குல் பந்தை வீச ஒரு வருட காலமாக பயிற்சி எடுத்து வருவதாக தெரிவித்தார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் டி20 போட்டி நேற்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.  இந்த போட்டியில் அற்புதமாக பந்துவீசிய புவனேஷ்வர் குமார் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு உதவினார். இந்த வெற்றிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புவனேஷ்வர் குமார் கூறிதாவது,

"நான் கடினமான சூழ்நிலைகளில் பந்துவீசுவதை அனுபவிப்பேன். கடந்த ஒரு வருடமாக நக்குல் பந்தை(ஆல் காட்டி மற்றும் நடுவிரலை முழுமையாக பயன்படுத்தாமல் மடக்கி வீசுவது) வீச பயிற்சி எடுத்து வருகிறேன். இக்காலத்தில் விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு புதிய முறைகளை கண்டுபிடிக்க வேண்டும்.

நாம் வெற்றி பெறும் போது அனைத்தையும் மறப்போம். நாங்கள் இன்று களத்தில் இறங்கும் போது எங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரிந்தது. நாங்கள் எப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும், நாங்கள் ஷாட் பிட்ச் பந்துகளை சிறப்பாக கையாள மாட்டோம் என்ற பெயர் இருந்து வந்தது. இந்த தொடரில் நாங்கள் அதனை சிறப்பாக எதிர்கொண்டோம்." இவ்வாறு அவர் பேசினார்.


நக்குல் பந்து(knuckleball)என்றால் என்ன?
நக்குல் பந்து என்பது ஆல் காட்டி மற்றும் நடுவிரலை கொண்டு பந்தை முழுமையாக பிடிக்காமல் பாதி விரல்களில் பிடித்து பந்தை வீசுவது. இப்படி வீசும் போது, பந்து கணிக்க முடியாத வேகத்தையும் பவுன்சும் கொடுக்கும். இதனால், பேட்ஸ்மேன்கள் திணறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

Saturday, 17 February 2018

'எல்லா புகழும் என் மனைவிக்கே'... அனுஷ்காவைப் புகழ்ந்து தள்ளிய கோலி!

 February 17, 2018     anushka, indai win the serious, india, virath     No comments   

'எல்லா புகழும் என் மனைவிக்கே'...அனுஷ்காவைப் புகழ்ந்து தள்ளிய கோலி!


கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக, தென் ஆப்பிரிக்க அணியை அதன் சொந்த மண்ணில் 5-1 என்ற கணக்கில் வீழ்த்தி ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

வெற்றிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அளித்த பேட்டியில், ''இந்தத் தொடர் வெற்றிக்கு தனது மனைவி அனுஷ்காவின் பங்கு மிகப்பெரியது என்றும் அவர் தனக்கு தொடர்ந்து உந்துதலாக இருக்கிறார்'' எனவும் காதல் மனைவி அனுஷ்காவைப் புகழ்ந்திருக்கிறார்.

 இந்த ஒருநாள் போட்டி தொடரில், விராட் கோலி 3 சதங்கள் உட்பட மொத்தம் 558 ரன்களைக் குவித்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

Thursday, 15 February 2018

காவிரி நீரை எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது -உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 February 15, 2018     Cauvery Dispute, kaveri issue, காவிரி, காவிரி பிரச்னை     No comments   

காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் நீண்டகாலமாகவே பிரச்னை இருந்து வருகிறது.


*காவிரி பிரச்னையில் தஞ்சை விவசாயிகள் 1990-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் சென்றனர். உச்ச நீதிமன்றம் மத்திய அரசை ஒரு தீர்ப்பாயம் அமைக்க உத்தரவிட்டது.

*மத்திய அரசு 1990-ம் ஆண்டு ஜூன் மாதம் காவிரி தீர்ப்பாயம்
அமைத்தது.


*பசுமை தீர்ப்பாயம் காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் 1991-ம் ஆண்டு ஜூன் மாதம் இடைக்கால தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதன்படி, கர்நாடகா 205 டி.எம்.சி நீரைத் தமிழகத்துக்கு வழங்க வேண்டும். கர்நாடகா தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மறுத்து போராட்டத்தில் குதித்தது. கலவரம் வெடித்தது. கர்நாடகாவில் 12 தமிழர்கள் கொல்லப்பட்டனர். தமிழர்கள் கர்நாடகாவில் இருந்து அடித்து விரட்டப்பட்டனர். இடைக்கால தீர்ப்புக்குத் தடைவிதித்து அவசர சட்டம் கொண்டுவந்தது கர்நாடக. அவசர சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது 

*இதனிடையே இடைக்கால தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது. அரசாணையை கர்நாடகா ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழகத்துக்குத் தண்ணீரும் தரவில்லை. 
*1993-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா காவிரி தண்ணீருக்காக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார். இப்படியாகப் பயணித்தது காவிரி பிரச்னை.

*1995-ல் தமிழகம் மீண்டும் உச்ச நீதிமன்றம் சென்றது. தமிழகத்துக்கு உடனடியாக 11 டி.எம்.சி தண்ணீர் வழங்க உத்தரவிடுகிறது. அதையும் கர்நாடக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.

*இப்படியாக காவிரி பிரச்னையில் சுமூக தீர்வு கிடைக்காமல் தொடர்ந்தது. இறுதியாக 2007-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி 1000 பக்கம் கொண்ட தீர்ப்பை காவிரி நடுவர் மன்றம் வழங்கியது. அதன்படி காவிரியில் கர்நாடகாவுக்கு 270 டி.எம்.சி , தமிழகம் புதுச்சேரிக்கு 192 டி.எம்.சி என்று பகிர்ந்துகொள்ள உத்தரவிடுகிறது.  வழக்கம்போல் கர்நாடகா தீர்ப்பை நிராகரித்துப் போராட்டத்தில் குதித்தது.

*இந்த இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.  இந்த வழக்குகளை விசாரிக்க மத்திய அரசு எதிர்த்தது. விசாரணை நடத்த தங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்றது உச்ச நீதிமன்றம். 
*வழக்கு விசாரணைகளின் போது தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று, காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பல உத்தரவுகளைப்  பிறப்பித்தது.  கர்நாடக அரசு எந்த உத்தரவுகளையும் செயல்படுத்தவில்லை.
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

'இறந்த மகனின்' விந்தணு மூலம் 'குழந்தை' பெற்றுக்கொண்ட தம்பதி!

 February 15, 2018     #COUPLE #PRESERVEDSPERM #தமிழ் NEWS     No comments   

'இறந்த மகனின்' விந்தணு மூலம் 'குழந்தை' பெற்றுக்கொண்ட தம்பதி!


புனேவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் இறந்துபோன தங்களுடைய மகனின் விந்தணு மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டுள்ளனர்.

 இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மூளைக் கட்டியால் உயிரிழந்த பிரதாமேஷ் பாட்டில் என்னும் 27 வயது இளைஞரின் விந்தணுவை அவருடைய பெற்றோர் சேகரித்து வைத்திருந்தனர்.

இந்த நிலையில், தங்களது மகனின் வாரிசைப் பார்க்க விரும்பிய பிரதாமேஷ் பாட்டிலின் பெற்றோர் தாம் சேகரித்து வைத்திருந்த விந்தணுவை பொருத்தமான பெண்ணின் கருமுட்டையுடன் இணைத்து, தற்போது இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டுள்ளனர்.

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
Older Posts Home

Popular Posts

  • 2018-19ம் ஆண்டில் ‘விராட் கோலி படை’க்கு காத்திருக்கும் சோதனைகள், சவால்கள்...
    2018-19ம் ஆண்டில் ‘விராட் கோலி படை’க்கு காத்திருக்கும் சோதனைகள், சவால்கள்... உலகக்கோப்பைப் போட்டிக்கு முன்பாக, 2018-19ம் ஆண்டில் இந...
  • 'இறந்த மகனின்' விந்தணு மூலம் 'குழந்தை' பெற்றுக்கொண்ட தம்பதி!
    'இறந்த மகனின்' விந்தணு மூலம் 'குழந்தை' பெற்றுக்கொண்ட தம்பதி! புனேவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் இறந்துபோன தங்களுடைய மகனி...
  • செல்லூர் ராஜுவின் 'செல்போன்' மாயம்
    செல்லூர் ராஜுவின் 'செல்போன்' மாயம் திருவண்ணாமலையில் உள்ள ஜவ்வாது மலைக்குச் சென்றபோது அமைச்சர் செல்லூர் ராஜுவின் செல்போன் ...

Search This Blog

Powered by Blogger.

Copyright © News Galaxy | Powered by Blogger
Design by Hardeep Asrani | Blogger Theme by NewBloggerThemes.com