News Galaxy

  • Home
  • Business
    • Internet
    • Market
    • Stock
  • Parent Category
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • Featured
  • Health
    • Childcare
    • Doctors
  • Home
  • Business
    • Internet
    • Market
    • Stock
  • Downloads
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • Parent Category
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • Featured
  • Health
    • Childcare
    • Doctors
  • Uncategorized

Thursday, 15 February 2018

காவிரி நீரை எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது -உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 February 15, 2018     Cauvery Dispute, kaveri issue, காவிரி, காவிரி பிரச்னை     No comments   

காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் நீண்டகாலமாகவே பிரச்னை இருந்து வருகிறது.


*காவிரி பிரச்னையில் தஞ்சை விவசாயிகள் 1990-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் சென்றனர். உச்ச நீதிமன்றம் மத்திய அரசை ஒரு தீர்ப்பாயம் அமைக்க உத்தரவிட்டது.

*மத்திய அரசு 1990-ம் ஆண்டு ஜூன் மாதம் காவிரி தீர்ப்பாயம்
அமைத்தது.


*பசுமை தீர்ப்பாயம் காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் 1991-ம் ஆண்டு ஜூன் மாதம் இடைக்கால தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதன்படி, கர்நாடகா 205 டி.எம்.சி நீரைத் தமிழகத்துக்கு வழங்க வேண்டும். கர்நாடகா தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மறுத்து போராட்டத்தில் குதித்தது. கலவரம் வெடித்தது. கர்நாடகாவில் 12 தமிழர்கள் கொல்லப்பட்டனர். தமிழர்கள் கர்நாடகாவில் இருந்து அடித்து விரட்டப்பட்டனர். இடைக்கால தீர்ப்புக்குத் தடைவிதித்து அவசர சட்டம் கொண்டுவந்தது கர்நாடக. அவசர சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது 

*இதனிடையே இடைக்கால தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது. அரசாணையை கர்நாடகா ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழகத்துக்குத் தண்ணீரும் தரவில்லை. 
*1993-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா காவிரி தண்ணீருக்காக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார். இப்படியாகப் பயணித்தது காவிரி பிரச்னை.

*1995-ல் தமிழகம் மீண்டும் உச்ச நீதிமன்றம் சென்றது. தமிழகத்துக்கு உடனடியாக 11 டி.எம்.சி தண்ணீர் வழங்க உத்தரவிடுகிறது. அதையும் கர்நாடக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.

*இப்படியாக காவிரி பிரச்னையில் சுமூக தீர்வு கிடைக்காமல் தொடர்ந்தது. இறுதியாக 2007-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி 1000 பக்கம் கொண்ட தீர்ப்பை காவிரி நடுவர் மன்றம் வழங்கியது. அதன்படி காவிரியில் கர்நாடகாவுக்கு 270 டி.எம்.சி , தமிழகம் புதுச்சேரிக்கு 192 டி.எம்.சி என்று பகிர்ந்துகொள்ள உத்தரவிடுகிறது.  வழக்கம்போல் கர்நாடகா தீர்ப்பை நிராகரித்துப் போராட்டத்தில் குதித்தது.

*இந்த இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.  இந்த வழக்குகளை விசாரிக்க மத்திய அரசு எதிர்த்தது. விசாரணை நடத்த தங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்றது உச்ச நீதிமன்றம். 
*வழக்கு விசாரணைகளின் போது தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று, காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பல உத்தரவுகளைப்  பிறப்பித்தது.  கர்நாடக அரசு எந்த உத்தரவுகளையும் செயல்படுத்தவில்லை.
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
Email ThisBlogThis!Share to XShare to Facebook
Newer Post Older Post Home

0 comments:

Post a Comment

Popular Posts

  • 2018-19ம் ஆண்டில் ‘விராட் கோலி படை’க்கு காத்திருக்கும் சோதனைகள், சவால்கள்...
    2018-19ம் ஆண்டில் ‘விராட் கோலி படை’க்கு காத்திருக்கும் சோதனைகள், சவால்கள்... உலகக்கோப்பைப் போட்டிக்கு முன்பாக, 2018-19ம் ஆண்டில் இந...
  • 'இறந்த மகனின்' விந்தணு மூலம் 'குழந்தை' பெற்றுக்கொண்ட தம்பதி!
    'இறந்த மகனின்' விந்தணு மூலம் 'குழந்தை' பெற்றுக்கொண்ட தம்பதி! புனேவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் இறந்துபோன தங்களுடைய மகனி...
  • செல்லூர் ராஜுவின் 'செல்போன்' மாயம்
    செல்லூர் ராஜுவின் 'செல்போன்' மாயம் திருவண்ணாமலையில் உள்ள ஜவ்வாது மலைக்குச் சென்றபோது அமைச்சர் செல்லூர் ராஜுவின் செல்போன் ...

Search This Blog

Powered by Blogger.

Copyright © News Galaxy | Powered by Blogger
Design by Hardeep Asrani | Blogger Theme by NewBloggerThemes.com